மாவட்ட ஆட்சியர் போல் நடித்த பெண்! மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விடுவிப்பு

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் என்று கூறி மாநகராட்சி சுகாதார மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட பெண்ணைப் பிடித்த போலீஸார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விடுவித்தனர்.

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் என்று கூறி மாநகராட்சி சுகாதார மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட பெண்ணைப் பிடித்த போலீஸார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் விடுவித்தனர்.
 இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் கௌரி (29). இவர், மதுரையைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தைத் திருமணம் செய்து, திருப்பூர், கருமாரம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
 இந்நிலையில், கௌரி, திருப்பூர், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார மருந்தகத்துக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். அப்போது, தான் திருப்பூருக்கு புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் என்று கூறி, மருந்தகத்தில் ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த ஆவணங்களையும் சரிபார்த்துக் கையெழுத்திட்டுள்ளார்.
 தொடர்ந்து, வெள்ளிக்கிழமையும் மருந்தகத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆனால், இருசக்கர வாகனத்தில் அவர் வந்ததால் சந்தேகமடைந்த சுகாதார மைய ஊழியர்கள், திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர், 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளதும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்துகொண்டதும்
தெரியவந்தது.  கடந்த வாரம் அனுப்பர்பாளையம் பள்ளி ஒன்றில் மாவட்ட ஆட்சியர் என்று கூறி அவர் ஆய்வு மேற்கொண்டதும் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அப்பெண்ணை போலீஸார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com