அவிநாசியில் ஸ்ரீ ராமானுஜர் ரத யாத்திரை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஸ்ரீராமானுஜர் ரத யாத்திரை நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஸ்ரீராமானுஜர் ரத யாத்திரை நடைபெற்றது.
இந்துக்கள் ஒற்றுமைக்காகவும், ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டியும், அவரது திருஉருவ ரத யாத்திரை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து சனிக்கிழமை காலை புறப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆர்எஸ்எஸ் கோட்டப் பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். செங்குந்த மகாஜன சங்க மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், அத்திக்கடவு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஎச்பி மாநிலப் பொருளாளர் ஏ.ஆர்.செல்வராஜ் வரவேற்றார். விஎச்பி மாநிலச் செயலாளர் பி.எம்.நாகராஜ் சிறப்புரையாற்றினார். இந்த ரத யாத்திரை அவிநாசி கைகாட்டிப்புதூர், ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com