விவசாயிகள் போராட்டம்: தொமுச சார்பில் திருப்பூரில் 25-இல் மறியல்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தொமுச (தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை) அறிவித்துள்ளது.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தொமுச (தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தொமுச மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடும் வறட்சியால் விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வாங்கிய கடன் முழுவதையும் ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஏப்ரல் 25-ஆம் தேதி ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பனியன், டையிங், பிரிண்டிங், கலாஸ், பாத்திரம், விசைத்தறி, போக்குவரத்து, ஆட்டோ உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர், குமரன் சிலை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது.
இதில், அனைத்துத் தொழிலாளர்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com