உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உடுமலை தளி சாலையில் விரிவாக்கப் பணிகள்  நடைபெற்று வருவதையொட்டி,  நெடுஞ்சாலையில் இருந்த  ஆக்கிரமிப்பு கடைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

உடுமலை தளி சாலையில் விரிவாக்கப் பணிகள்  நடைபெற்று வருவதையொட்டி,  நெடுஞ்சாலையில் இருந்த  ஆக்கிரமிப்பு கடைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
உடுமலை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளால் பல முக்கிய சாலைகள் குறுகிய சாலைகளாக மாறிப் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,  நகராட்சி அதிகாரிகள் கடந்த  2  ஆண்டுக்கும் மேலாக அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க உடுமலை நகரின் மேற்கு எல்லையான மின் மயானம் முதல் கொழுமம் சாலை வரையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 209 தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதேபோல ராஜேந்திரா சாலை,  தாராபுரம் சாலை ஆகியவற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,  உடுமலை நகரில் மிக முக்கிய சாலையாக விளங்கும் தளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி தளி சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை தாண்டி நெடுஞ்செழியன் காலனி அருகே சாலையின் இருபுறமும் இருந்த 25- க்கும்  மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. குறிப்பாக அப்பகுதியில் இருந்த காமாட்சி அம்மன் கோயிலின் முன் பகுதி இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போது, நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார்,  நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் சத்யபாமா,  நகராட்சி கட்ட ட ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.  
இதுகுறித்து நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடுமலையில் இருந்து மூணாறு,  திருமூர்த்தி மலை, அமராவதி அணை உள்ளிட்ட பல் வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக தளி சாலை விளங்கி வருகிறது. இந்நிலையில்,  இந்த சாலை ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறுகிய சாலையாக மாறி விட்டது. இதனால் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com