சம்பா சாகுபடி பாதிப்பு: தாராபுரம் விதைப் பண்ணைகளில் 50 ஆயிரம் டன் விதை நெல் தேக்கம்

வறட்சியால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் 50 ஆயிரம் டன் விதை நெல்கள் தேக்கமடைந்துள்ளன.

வறட்சியால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் 50 ஆயிரம் டன் விதை நெல்கள் தேக்கமடைந்துள்ளன.
தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு ஆண்டுக்கு 85 ஆயிரம் டன் சான்று விதை நெல் தேவைப்படுகிறது. இதில் 45 சதவீத சான்று விதை நெல் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 46 தனியார் சான்று விதை நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதில் தாராபுரம் மற்றும் காங்கயம் தாலுகாவில் மற்றும் 40 தனியார் சான்று விதை நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதை நெல் கேரளம்,  கர்நாடகம்,  ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் டெல்டா மாவட்டம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விதை நெல் விற்பனைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக விதை நெல் சுத்திகரிப்பு நிலையங்களில் முன்கூட்டியே விதை நெல்லை கொள்முதல் செய்து வைத்திருப்பர். சம்பா பருவம் துவங்குவதற்கு முன்பு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் விதை நெல் சுத்திகரிப்பு பணிகள் நடைபெறும்.
அதன்பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முறையான சான்று பெறப்படும். இதன் அடிப்படையில் நடப்பு சம்பா பருவத்துக்கு இப்பகுதியில் உள்ள விதை நெல் சுத்திகரிப்பு நிலையங்களில் 50 ஆயிரம் டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில்,  பருவ மழை பொய்த்து அணைகளில் தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கர்நாடகம், கேரளம்,  ஆந்திர மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நடப்பு ஆண்டு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் இருப்பில் உள்ள 50 ஆயிரம் டன் விதை நெல்லை சுத்திகரிப்பு பணி செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர். இதனால் விதை நெல் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதேபோல் இத்தொழிலில் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி அவதியுற்று வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விதை சங்க செயலர் சி.காளிதாஸ் கூறியதாவது:
விதை நெல் என்பது பிரத்யேகமாக நேரடியாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல்லை சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்கள் கொள்முதல் செய்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். தேவைப்படும்போது விதை நெல்லை சுத்திகரிப்பு செய்து முறைப்படி சான்று பெற்று விற்பனை செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இதே நிலை நீடிக்கிறது. இதனால் விதை நெல் விற்பனையில் மந்த நிலை காணப்படுகிறது. இப்பகுதியில் மட்டும் 50 ஆயிரம் டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியதும் அதற்குத் தேவையான 25 ஆயிரம் டன் விதை நெல் தற்போது இருப்பு உள்ளது. இதுதவிர தேவைக்கு உடனடியாக சுத்திகரிப்பு செய்துகொள்ள போதிய அளவு விதை நெல் இருப்பு உள்ளது என்றார்.

வெங்கடேஷ்வரா பள்ளியில்...
சேவூர் அருகே அ.குரும்பபாளையம் வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.  மேலும்,  கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய்,  பலகார வகைகள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,  கூட்டுபிராத்தனை,  கிருஷ்ணபஜன் உள்ளிட்டவை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com