ரூ. 250 கோடி மதிப்பில்  குடிநீர் விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ. 250 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்ட விரிவாக்கப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ. 250 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்ட விரிவாக்கப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குடிநீர்த் திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,  ரூ. 250 கோடி செலவில் குடிநீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் அத்திட்டத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திட்டத்தின் கீழ் தென்னம்பாளையம் மற்றும் முத்தணம்பாளையம் அருகேயுள்ள பொன்சுப்பு நகரில், 10 மற்றும் 5 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்க மற்றும் தரைமட்ட தொட்டிகள் கட்டும் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மணிமாறன்,  திருப்பூர் மாவட்ட உதவி பொறியாளர்கள் கௌரிசுந்தரம்,  முனியாண்டி, அதிமுக நிர்வாகி சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com