மகாராணி கல்லூரியில் கலை விழாப் போட்டிகள்

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழாப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழாப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இந்த விழாவுக்கு, கல்லூரி இயக்குநர் எம்.ஆர்.தமிழரசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.கோவிந்தராஜ், பொருளாளர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.அனிதா பங்கேற்று விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
மாணவ, மாணவியர் அதிக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். கல்வி மட்டுமே மனிதர்களுக்கு அனைத்தையும் அளிப்பதில்லை. இதுபோன்ற கலை விழாப் போட்டிகளில் பங்கேற்று தனித் திறனை வெளிப்படுத்துவது அவசியம். இதன்மூலம் பல்வேறு வகையான அனுபவங்களை பெறமுடியும். மாணவ, மாணவியர் கலாசார சீரழிவுக்கு அடிமையாகாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 30 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி மாணவ, மாணவியர் பங்கேற்ற அலங்கார அணிவகுப்பு, விநாடி -வினா, குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் என்.ஏ.எச்.ரகுமான், முதல்வர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஞானாம்பாள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com