அயோத்தி விவகாரம்: இந்து, இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகளும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளும் திருப்பூரில்  புதன்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகளும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளும் திருப்பூரில்  புதன்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு திருப்பூரில்,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் நிலையம் அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை வகித்தார்.  
மூத்த தலைவர் ஹைதர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சுப்பராயன், தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது யாசர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் சையத் முஸ்தபா, தமிழர் வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சந்தோஷ்கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் அதைக் கட்ட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர், காங்கயம் சாலை, போக்குவரத்து பணிமனை முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் மாவட்டத் தலைவர் பஷிர் அகமது தலைமை வகித்தார். ஃபாப்புலர் ஃபிரண்ட்  ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 
மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அந்த அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோரை மாநகர போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்து அமைப்புகள் சார்பில்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட  வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே புதன்கிழமை மாலை காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், மாநில நிர்வாக்குழு உறுப்பினர் வி.எஸ்.செந்தில்குமார், வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், அயோத்தியில் அதே இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும்.  அதற்குரிய நடவடிக்கையை சிறப்பு கவனம் செலுத்தி மத்திய அரசும், உத்திரப்பிரதேச அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரகம் அருகே பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தவிர, மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்து, இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக, மாநகரில் போராட்டங்கள் நடைபெற்ற நேரங்களில் போக்குவரத்து தடைபட்டு, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள்அனுப்பிவைக்கப்பட்டன. இதையொட்டி, காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடுமலையில்....: பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உடுமலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ( டிசம்பர் 6) முன்னிட்டு உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அ.அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எஸ்.கமால்தீன் முன்னிலை வகித்தார். இதில், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே ண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநில மருத்துவ சேவை அணிச் செயலாளர் ஜே.கித்ர், தலைமை நிலையப் பேச்சாளர் கோவை முஜீப்ரஹ்மான் ஆகியோர் சிப்புரையாற் றினார். கா.சு.நாகராசன்(தமிழ்நாடு திராவிடர் கழகம்), செ.சரவணன்(தலித் முரசு), ஜே.முகம்மது அப்துல்லாஹ் அன்வாரி (ஜாமிஆ பள்ளி வாசல்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந் தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். இதையொட்டி, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com