டிசம்பர் 9இல் பொது விநியோக  திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத் திட்ட  சிறப்பு  குறை கேட்பு முகாம்  சனிக்கிழமை (டிசம்பர் 9) நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத் திட்ட  சிறப்பு  குறை கேட்பு முகாம்  சனிக்கிழமை (டிசம்பர் 9) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது:
திருப்பூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை கேட்பு முகாம்  டிசம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை    அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. 
 அதன்படி, அவிநாசி வட்டத்தில் சேவூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் வடக்குப் பகுதியில் வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் தெற்குப் பகுதியில் கண்டியன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில் வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டத்தில் துத்தாரிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,  உடுமலை வட்டத்தில்  மானுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் பாப்பான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் குப்புச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், காங்கயம் வட்டத்தில் சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய  இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
 இக்குறை கேட்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு,  பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடித் தீர்வுகாண உள்ளனர்.  
இதில், புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை அளிக்கலாம். 
மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் செய்வது போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே,   இந்த வாய்ப்பினை பொது மக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com