நியாய விலைக் கடையில் தீ விபத்து: உணவுப் பொருள்கள் சேதம்

உடுமலையில் நியாயவிலைக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாமாயில்,  பச்சரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

உடுமலையில் நியாயவிலைக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாமாயில்,  பச்சரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
 உடுமலை,  சிங்கப்பூர் நகரில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர்,  கடை ஊழியர்கள் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர். 
    இந்நிலையில், இக்கடையில்  செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.  தீ விபத்தில், பாமாயில்,  பச்சரிசி உள்ளிட்ட
உணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின. தனி வட்டாட்சியர் கி.தயானந்தன், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஆறுச்சாமி உள்ளிட் டோர் புதன்கிழமை கடைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
  இது குறித்து மேலாளர் ரவி கூறுகையில்,  தீ விபத்தில் 285 கிலோ பாமாயில், 340 கிலோ பச்சரி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 10 ஆ யிரம் இருக்கும். மின் கசிவினால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com