விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

வாகன விபத்து நஷ்டஈடு வழங்கப்படாததை அடுத்து, தாராபுரத்தில் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

வாகன விபத்து நஷ்டஈடு வழங்கப்படாததை அடுத்து, தாராபுரத்தில் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
  காங்கயம் வட்டம்,  படியூரை சேர்ந்தவர் குப்புசாமி (45), தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி சுந்தராள் (40). இவர் கடந்த 14.2.2011இல் காங்கயத்திலிருந்து ஊத்துக்குளிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். ஊத்துக்குளி பேருந்து நிலையத்தில்,  பேருந்தில் இருந்து சுந்தராள் இறங்க முற்பட்டபோது,  ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் தவறி விழுந்து காயமடைந்தார். காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
   இந்நிலையில், அவர் நஷ்டஈடு கோரி தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம், அவருக்கு  நஷ்டஈடாக  ரூ. 91 ஆயிரத்து 870 வழங்க வேண்டும் என கடந்த 4.2.2015இல் உத்தரவிட்டது. ஆனால்,  நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படாததால்,  நீதிபதி கருணாகரன் உத்தரவின்பேரில் ஈரோட்டிலிருந்து தாராபுரம் வந்த அரசுப் பேருந்தை  நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com