மார்ச் 1-ஆம் தேதி  முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வரும் மார்ச் முதல் தேதியிலிருந்து 21 நாள்களுக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
மார்ச் 1-ஆம் தேதி  முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வரும் மார்ச் முதல் தேதியிலிருந்து 21 நாள்களுக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்தி:
கால்நடை வளர்ப்பில், கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினைப் பிடிப்புத் தடைபடும். எருதுகளின் வேலைத் திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் அதிகரிக்கும். பொதுவாக, கலப்பின மாடுகளை கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்துக் கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் மார்ச் முதல் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாள்களுக்கு இந்த முகாம் நடைபெறும். மாநகராட்சி, 6 நகராட்சிகள், 9 வட்டங்கள், 16 பேருராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 350 வருவாய் கிராமங்கள், 265 ஊராட்சிகள், குக்கிராமங்கள் ஆகியவற்றில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக, திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு 3.41 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் குளிரூட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை மருந்தகங்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக புதன்கிழமை (பிப்ரவரி 22) அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, கோமாரி நோய் தடுப்பூசி பற்றிய விவரங்களைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையினர், ஆவின் பால் கூட்டுறவு சங்கச் செயலர், பஞ்சாயத்து தனி அலுவலர், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் கூடி, கோமாரி நோய்த் தடுப்புபூசி முகாம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை கோட்டம் வாரியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com