மொச்சைப் பயறு விலையேற்றம்: கிலோ ரூ.60-க்கு விற்பனை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைத் தருணத்தில்  மொச்சைப் பயறு விலை அதிகரித்து கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைத் தருணத்தில்  மொச்சைப் பயறு விலை அதிகரித்து கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொச்சைப் பயிறு செம்மண் பாங்கான பூமிகளில் விளையக் கூடியது. உடுமலை பகுதியில், ஆண்டிபட்டி, எலையமுத்தூர், தளி, ஜல்லிபட்டி, தும்பலப்பட்டி என மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியை ஒட்டிய நிலங்களிலும், உடுமலையின் வடக்குப் பகுதி கிராமங்களான தாந்தோனி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் மொச்சைப் பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், காலதாமதமாக பயிரிட்டதால் விளைச்சல் குறைந்துபோனது. வழக்கமாக கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்கப்படும் மொச்சைப் பயறு தற்போது கிலோ ரூ. 60-க்கு விற்கப்படுகிறது.
  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
 பொங்கல் பண்டிகையையொட்டி, மொச்சைப் பயறு வரத்து அதிகமாக இருக்கும்.
இதனால், விலையும் குறைவாக இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததால் மொச்சைப் பயறு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், உடுமலை சந்தை வியாபாரிகள், ஒட்டன்சத்திரம், அன்னூர், புளியம்பட்டி பகுதிகளில் இருந்து மொச்சைப் பயறு கொள்முதல் செய்து, உடுமலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், மொச்சைப் பயறு கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com