காங்கயத்தில் பரிஷத் கண்டன ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 17th July 2017 08:21 AM | அ+அ அ- |
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, காங்கயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் சில நாள்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
அந்தக் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டத் தலைவர் சுந்தரசாமி தலைமை வகித்தார். மவாட்ட துணைத் தலைவர் கார்த்திக்ராஜா, மாவட்டச் செயலாளர் வி.சங்கரகோபால், பஜ்ரங்தளம் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.