தார் கலவை தொழிற்சாலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் பகுதியில் அமையவுள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  சார் ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளிக்கப்பட்டது.

பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் பகுதியில் அமையவுள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  சார் ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மொய்யாண்டம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டு வரும் தனியார் தார் கலவை தொழிற்சாலை நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய  அனுமதி,  ஊராட்சி மன்ற உரிமம், வட்டாட்சியர் உரிமம்  உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல்,  தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதைத் தடுத்து நிறுத்தக் கோரி திருப்பூர் ஆட்சியரிடம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மனு அளித்தோம்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு  வாரியத்தின் திருப்பூர் கோட்டத்திலிருந்து ஆய்வு செய்த அதிகாரிகள், தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து
500 மீட்டர் தொலைவினுள் வீடு, தொழிற்கூடங்கள் உள்ளிட்டஎதுவும் இல்லாமல் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்க முடியும்  என பொதுமக்களிடம் சுட்டிக் காட்டினர்.
அப்பகுதியில் அளவீடு செய்ததில்,  வீடு, விசைத்தறிக் கூடம், பெருமாநல்லூர் துணை மின்நிலையம், மின்வாரிய அலுவலர் குடியிருப்பு உள்ளிட்டவை அங்கு உள்ளன.  மொய்யாண்டம்பாளையம் மாரியம்மன் கோயிலும் உள்ளது.
ஆனால், குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு அப்பால் தொழிற்சாலை அமைந்துள்ளதாக அவிநாசி வட்டாட்சியர்  தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, இங்கு தொழிற்கூட உரிமம் வழங்க கிராம மக்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com