நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள்: கூட்டுறவு சங்கத்தினர் வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அத்யாவசியப் பொருள்களை சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அத்யாவசியப் பொருள்களை சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நியாயவிலைக் கடைகளில் பணி புரிவோருக்கு மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் மாத ஊதியம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவதற்குப் பதிலாக, சங்க செயலாளர்கள் ஊதியத்தை இழுத்தடித்து வழங்கும் நிலை உள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இதைக் கண்காணித்து ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருள்களில் 50 கிலோவுக்கு 2.5 கிலோ வரை குறைவு ஏற்படுகிறது. எனவே பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் உரிய முறையில் சீராக ஆய்வு செய்து,  நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் பொருள்களை சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பி.எஃப்., இ.எஸ்.ஐ.க்கு பிடித்தம் செய்யப்படும் தொகைகளை துறைவாரியாகச் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வங்கிகளில் உள்ள நகைக்கடன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com