20-இல் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (ஜூலை 20)  நடைபெற உள்ளது.

மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (ஜூலை 20)  நடைபெற உள்ளது.
  அவிநாசி ஒன்றிய வட்டார வளமையம்,  அனவைருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்  வரும் 20-ஆம் தேதி  அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 2 மணி வரை நடைபெறுகிறது.  இதில்,  18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
  இம்முகாமில் பங்கேற்போருக்கு உரிய பரிசோதனை, ஆய்வின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை,  கல்வி உதவித் தொகை,  உபகரணங்கள்,  தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் பங்கேற்க வருவோர்  பிறப்புச் சான்றிதழ்,  ஆதார் அட்டை,  புகைப்படம்  5, 2 குடும்ப அட்டை நகல்   உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com