வெள்ளாடு வளர்ப்பு: நாளை இலவசப் பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
  இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அர்த்தநாரீஸ்வரன் கூறியதாவது:
 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திருப்பூரில் ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை  இப்பயிற்சி அளிக்கப்படும். இதில், திருப்பூர் சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்கலாம்.  வெள்ளாடு வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com