வெள்ளக்கோவில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் இன்றுமுதல் 3 நாள்களுக்கு வேலை நிறுத்தம்

வெள்ளக்கோவில் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று தொடங்கி வியாழக்கிழமை வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஜவுளித் துறைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக வட்டார சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கப் பொருளாளர் ஏ.தேசிகன் கூறியதாவது:
 விசைத்தறித் தொழிலுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் கடந்த 70 ஆண்டுகளாக ஜவுளித் துறைக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை. சென்வாட் வரிக் காலகட்டத்தில் கூட இத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போதைய வரி விதிக்கும் முடிவால் விசைத்தறி தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால் இத்தொழிலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வரிவிதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com