உலக சிட்டுக் குருவிகள் தினக் கொண்டாட்டம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளியில் உலக சிட்டுக் குருவிகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளியில் உலக சிட்டுக் குருவிகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
என்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் எஸ்.சேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். "சிட்டுக் குருவிகளை காப்போம்-பறவைகளை போற்றுவோம்' என்ற தலைப்பில் என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் பேசினார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நாடகம்  நடைபெற்றது. "சிட்டுக் குருவிகள்' எனும் குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.
ராகல்பாவி பள்ளி: உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உலக சிட்டுக் குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிட்டுக் குருவிகள் அழிய காரணம் என்ன, அவைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மா ணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சிட்டுக் குருவிகளை பாதுகாப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com