ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் சோதனை

தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார்.

தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார்.
தாராபுரத்தை அடுத்துள்ள நல்லதங்காள் அணை, உடையார் குளம் ஆகிய பகுதியில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியை பார்வையிட்ட பிறகு ஆட்சியர் ஜெயந்தி தாராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். பூங்கா சாலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில், மாணவிகள் விடுதிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.
உடனடியாக விடுதிக்கு நேரில் சென்று மாணவியரிடம் விசாரித்தார். மேலும், சமையல் கூடம் உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். சமைத்து வைத்திருந்த உணவு குறைவாக இருந்ததால் மாணவியருக்கு இதுபோதுமானதாக இருக்குமா என சமையலரிடம் விசாரித்தார். மேலும் அங்கு இருந்த நீராவி அடுப்பு உபயோகப்படுத்தாமல் இருந்ததை பார்த்து ஏன் உபயோகப்படுத்தவில்லை என விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவிகளிடம் விடுதிக்கு வெளியே நின்று பேசக்கூடாது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் வரும் பட்சத்தில் அலுவலக அறையில் வைத்து பேச வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
மாணவிகள் விடுதிக்கு வார்டன், காவலாளி இல்லை மற்றும் காம்பவுண்ட் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி தேவை என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். ஆட்சியர் பரிசீலனை செய்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com