அவிநாசியில் வாழை சாகுபடி கருத்தரங்கம்

வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கம் அவிநாசியில் வியாழக்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கம் அவிநாசியில்

வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கம் அவிநாசியில் வியாழக்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான வாழை சாகுபடி குறித்த கருத்தரங்கம் அவிநாசியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில், கண்காட்சியைத் தொடக்கி வைத்து ஆட்சியர் ச.ஜெயந்தி பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3000 ஹெக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை சாகுபடிக்கு அதிகமாகத் தண்ணீர் பயன்படுத்துவது, மண் வளம் குறித்து தெரியாமல் உரம் இடுவது, தரமான வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யாதது போன்றவற்றால் மகசூல் குறைந்துவிடுகிறது.வாழையில் பலவித ரகங்கள் இருந்தாலும், திட்டமிட்டு திசு வாழைக் கன்றுகளை நடுவதே சிறந்தது.
அவிநாசி வட்டாரத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 2,750 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஹெக்டருக்கு தலா ரூ.37,500 மதிப்புள்ள திசு வாழைக் கன்றுகள் மானியமாக வழங்கப்படுகிறது. இப்பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. இங்கு, 2 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில், தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு வாழை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் பாடுபட வேண்டும் என்றார்.
முன்னதாக, வாழைப் பழங்களின் ரகங்கள், வாழைப் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திசு வாழைக் கன்றுகள் ஆகியவை இடம் பெற்றிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் ச.ஜெயந்தி பார்வையிட்டார்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் க.ச.சுகந்தி, உதவி இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலை அலுவலர்கள் மு.ஜெரினாபேகம், லலிதா, சித்தார்த்தன், சந்திரகவிதா, ஞானசேகரன், சுசிந்திரா, சுரேஷ்குமார், துணை தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவடைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com