இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு: உரிய முன்னேற்பாடுகளுடன் வர அறிவுறுத்தல்

இரண்டாம் நிலைக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்போர் உரிய முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலைக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்போர் உரிய முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்துத் தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி, திருப்பூர் குமரன் கல்லூரி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னக்கரை பார்க் கல்லூரி, அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, ஜெயந்தி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிலகம்,ஜெயந்தி சிபிஎஸ்இ பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 8,120 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எழுத்துத் தேர்வில் பங்கேற்பவர்கள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணை (இஹப்ப் கங்ற்ற்ங்ழ்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையை பதிவிறக்கம் செய்து எடுத்து வருதல் வேண்டும்.
பதிவிறக்க அழைப்பாணையில் புகைப்படம் இல்லாவிடில் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம்  கையொப்பம் பெற்று தேர்வு மையத்துக்கு எடுத்து வருதல் வேண்டும். அழைப்பாணை இல்லாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எழுத்துத் தேர்வுக்கு வருபவர்கள் பரீட்சை அட்டை கொண்டு வருதல் வேண்டும். நீலம் அல்லது கருப்பு மை பேனா உபயோகித்தல் வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு பென்சில் மற்றும் இதர எழுதுகோல்களை உபயோகித்தல் கூடாது. தேர்வு மையத்தினுள் செல்லிடப்பேசி, கால்குலேட்டர் மற்றும் எவ்வித எலக்ட்ரானிக் பொருள்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com