காங்கயத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்

காங்கயம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வீட்டு உபயோகம், மண் பாண்டங்கள் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மண் எடுத்துச் செல்ல

காங்கயம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வீட்டு உபயோகம், மண் பாண்டங்கள் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என காங்கயம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கயம் வட்டாட்சியர் தே.வேங்கடலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
காங்கயம் வட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள படியூர் ஆலங்காட்டுத் தோட்டக் குளம், மருதுறையில் உள்ள காளிவலசுக் குளம், நிழலியில் உள்ள கரியக்கவுண்டன் புதூர் குளம், சிவன்மலை, காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் உள்ளிட்ட சிறு கனிமங்களை வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய பயன்பாட்டுக்காக வெட்டி எடுத்துச் செல்ல நிபந்தனைகளுக்கு உள்பட்டு, பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் வசிப்பிடம் அல்லது விவசாய நிலம் இருக்குமிடம், மண் எடுக்கப்பட வேண்டிய இடம் ஆகியன ஒரே வருவாய் கிராமத்திலோ, அருகில் உள்ள வருவாய் கிராமத்திலோ இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு நஞ்சை பூமி ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அளவிலும், புஞ்சை பூமி ஒரு ஏக்கருக்கு 90 மீட்டர் கன அளவிலும், வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் செய்வோருக்கு 60 கன மீட்டர் அளவிலும் மண் வெட்டி எடுக்க தாராபுரம் உதவி ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com