"தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும்'

தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி, தென்னை விவசாயிகளைக் காக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி, தென்னை விவசாயிகளைக் காக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வறட்சியின் காரணமாக தென்னை விளைச்சல் இந்தியாவில் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த நிலையில் தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய் விலை உயரவில்லை. இதற்கு காரணம் கலப்படம்தான். தேங்காய் எண்ணெயில் பாமாயில், இண்டஸ்டிரியல் ஆயில் என்று சொல்லக் கூடிய ஒயிட் ஆயில் போன்றவைகளை கலக்கின்றனர். இதனால் மக்களுடைய உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. விலையும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.
எனவே, அரசு இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com