வெள்ளக்கோவில் அருகே சூறாவளி: 40 வீடுகள் சேதம்; மரங்கள் வேரோடு சாய்ந்தன

வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை வீசிய சூறாவளியால் 40 வீடுகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் பகுதியில் வியாழக்கிழமை வீசிய சூறாவளியால் 40 வீடுகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
 உத்தமபாளையம், தாசவநாயக்கன்பட்டி பகுதிகளில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில், உத்தமபாளையம், அங்காளம்மன் நகர், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, கொமரபாளையம், தண்ணீர்பந்தல், வடக்குவலசு, சேர்வகாரன்பாளையம், சாலைப் புதூர் ஆகிய பகுதிகளில் 40 வீடுகள், விசைத்தறிப் பட்டறைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
 உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் இரும்புக் கதவு, கான்கிரீட் நுழைவு வளைவு, சுற்றுச்சுவர் ஆகியவை இடிந்து விழுந்தன.  
 காங்கயம் வட்டாட்சியர் பி.வேங்கடலட்சுமி, வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சேத மதிப்பீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 20 மணி நேரத்துக்கும் மேலாகத் தடைபட்டுள்ள மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com