திருப்பூர், வங்கதேச தொழிற்சங்கத்தினர் சந்திப்பு

தொழிலாளர் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அறியும் வகையில் வங்கதேச தொழிற்சங்கத்தினர், திருப்பூர் தொழிற்சங்கத்தினரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

தொழிலாளர் நலன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து அறியும் வகையில் வங்கதேச தொழிற்சங்கத்தினர், திருப்பூர் தொழிற்சங்கத்தினரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு நிகழ்வில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பின்னலாடைத் துறை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், வங்கதேச தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகி சேகர் கூறியதாவது:
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் சம்பளம், அடிப்படைத் தேவைகள், குறைபாடுகள் போன்ற விவகாரங்களில் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, உரிய வகையில் பிரச்னைகளுக்கு தீர்வுகண்டு வருகின்றன.
இங்குள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள், தொழிலாளர் பிரச்னைகளை எவ்வாறு கையாள்கிறோம், தொழிலாளர் நலச் சட்ட திட்டங்கள், பாலின வேறுபாடுகள், பாலியல் தொல்லைகள் மற்றும் அவை குறித்த புகார்களின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வங்கதேச தொழிற்சங்கக் குழுவினர் கேட்டறிந்தனர்.
வங்கதேச நாட்டில் பின்னலாடைத் துறையில் தொழிலாளர் நலன் காக்கும் சட்ட திட்டங்கள், ஊதியம் போன்றவை குறித்து நாங்கள் கேட்டறிந்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com