கேஎம்சி பள்ளிக்கு திறந்தநிலை பள்ளி நிறுவன அங்கீகாரம்

பெருமநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளிக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவன (என்ஐஓஎஸ்) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெருமநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளிக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவன (என்ஐஓஎஸ்) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 இது குறித்து தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவன மண்டல இயக்குநர் பி.ரவி, கே.எம்.சி. பள்ளித் தளாளார் சி.எஸ்.மனோகரன் ஆகியோர் கூறியதாவது:
 மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் மூலம், வேலைக்குச் செல்வோர், பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்குச் செல்லாமலேயே 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து தேர்வு எழுதலாம்.
 இதில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2  தேர்வுக்கு 11 பாடங்கள் வழங்கப்படும். இதில், தாங்கள் விரும்பும் 5 பாடங்களைத் தேர்வு செய்து, எளிதாகத் தேர்வு எழுதலாம். மாதம் ஒரு தேர்வு எனக்கூட தனித் தனியாகத் தேர்வு எழுதலாம். 5 பாடங்களின் தேர்ச்சியும் ஒரே சான்றிதழில் வழங்கப்படும். இத்தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதலாம்.
 மேலும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் (மாநிலக் கல்வி வாரியத்தில்) இரு பாடங்களில் தேர்வு பெற்றிருந்தால்போதும், விருப்படி மற்ற 3 பாடங்கள் என்ஐஓஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். தேர்ந்தெடுத்த பாடங்களை இடையில் மாற்றிக் கொள்ளலாம். இந்நிறுவனத்தில் வழங்கப்படும் சான்றிதழ் மூலம் மாநில கல்விக் வாரியத்திலும், பொறியல், மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும். இந்தச் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். ஏழை, எளிய மாணவர்களுக்கும், பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். மிகக் குறைந்த கட்டணத்தில் தொழில் கல்வியும் கற்றத் தரப்படுகிறது.
  இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெறவதுடன், புத்தகங்கள் அவரவர் வீடுகளுக்கே தமிழ் மொழியில் அனுப்படும். 10-ஆம் வகுப்பு படிக்க 14 வயது பூர்த்தியுடன், சுய சான்றிதழ் உள்ளிட்டவை போதுமானது. பிளஸ் 2 படிக்க 15 வயது பூர்த்தியுடன், அங்கீகரித்த வாரியத்தின் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி சான்றிதழும் வழங்க வேண்டும். 10-ஆம் வகுப்புப் படிக்க ரூ.1,480, பிளஸ் 2 படிக்க ரூ. 1,680 என கட்டணம் செலுத்த வேண்டும்.
 இதில் பயிலும் மாணவர்கள், எளிய முறையில் கல்வி கற்க பெருமாநல்லூர் கேஎம்சி பள்ளியில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு  99655 19394, 98422 19529 ஆகிய செல்லிடப் பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com