கொங்கு மருத்துவர் சமூகத்தை  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க வலியுறுத்தல்

கொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கொங்கு மருத்துவர் சமூக நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கொங்கு மருத்துவர் சமூக நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு கொங்கு மருத்துவர் சமூக நலச் சங்க மாநில மாநாடு பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.ராமசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.துரைசாமி, மாநில துணைச் செயலாளர் இ.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் ஒன்றியத் தலைவர் ஆர்.தண்டபாணி வரவேற்றார். ஆண்டறிக்கையை மாநிலச் செயலாளர் என்.சிவகுமார் வாசித்தார். சங்க வரவு, செலவுக் கணக்கை மாநில பொருளாளர் கே.சந்திரசேகரன் தாக்கல் செய்தார்.
 இதில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கொங்கு மருத்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மிகவும் பின் தங்கியோர் பட்டியலில் உள்ள இச்சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதுவரை கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய,மாநில அரசை கேட்டுக் கொள்வது
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்லடம் ஒன்றியச் செயலாளர் கே.ஜி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com