மதுக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருப்பூரில் மதுக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் மதுக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், போயம்பாளையத்தை அடுத்த நஞ்சப்பா நகரில் இருந்து கஞ்சம்பாளையம் செல்லும் சாலையில் புதிதாக மதுக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதாகத் அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அந்த மதுக் கடை முன்பாகத் திரண்டனர். மதுக் கடையை திறக்கக் கூடாது என்று கூறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சுப்ரமணியம், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதியில் மதுக் கடையைத் திறக்க கூடாது என்று கூறி, ஏற்கெனவே மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால்,
அதிகாரிகள் அளித்த உறுதிமொழியையும் மீறி, இரு தினங்களுக்கு முன்பாக  மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை உடனே மூட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.
 அதையடுத்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள், மதுக் கடையில் இருந்து 3 மதுபானப் பெட்டிகளை அங்கிருந்து எடுத்து சென்றனர். மதுக் கடையைத் திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரகத்தில் மனு... கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
 அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் மதுக் கடை அமைக்கவுள்ளனர். இங்கு மதுக் கடை அமைக்கக் கூடாது. மதுக் கடைக்கு எதிராக ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம சபைத் தீர்மானத்தை மீறி, மதுக் கடை அமைக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 திருப்பூர் மாநகராட்சி, 35-ஆவது வார்டுக்கு உள்பட்ட புதுப்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், இங்குள்ள குடியிருப்பு பகுதி அருகே புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com