திருட்டு வழக்குகளில் தொடர்பு: கேரளத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது

மாவட்டக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவரை வியாழக்கிழமை ஊத்துக்குளி தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாவட்டக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவரை வியாழக்கிழமை ஊத்துக்குளி தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் எல்லைக்கு உள்பட்ட கெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் சில நாள்களுக்கு முன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 பவுன் நகைகள் உள்ளிட்டவை திருட்டுப் போயின. இதேபோல, தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள், வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 23 பவுன் நகைகள் திருட்டுப் போயின.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா உத்தரவிட்டார். ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி, காங்கயம் சாலை, நொய்யல் பாலம் வழியாக சென்ற காரை சந்தேகத்தின் பேரில் தனிப்படையினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், காங்கயம் அருகே உள்ள படியூர், ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.மலைசாமி (52), கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சி.வீனஸ் (எ) வர்க்கீஸ் (50) என்பதும், மேற்கூறப்பட்ட இரு திருட்டுச் சம்பவங்களிலும் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் வந்த கார் பறிமுதல்
செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "மதுக் கூடம் நடத்தியதில் இருவரும் அறிமுகமாகி, சேர்ந்து தொழில் செய்துள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். திருடிய நகைகளை அவர்கள் விற்றது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் நகைகள் மீட்கப்படும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com