பூலாங்கிணற்றில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் எஸ்.சேகரன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.தேவிகா வரவேற்றார். அறிவியல் மன்றச் செயலாளர் சி.சுதா முன்னிலை வகித்தார். இதில், "டெங்கு காய்ச்சல் பரவும் முறைகளும், அதைத் தடுக்கும் வழி முறையும்' எனும் தலைப்பில் ஆசிரியர் கு.தமிழ்மணி பேசினார். மேலும், "டெங்கு விழிப்புணர்வு' எனும் தலைப்பில் மாணவ, மாண விகள் பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.
இதில், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ராகல்பாவி தொடக்கப் பள்ளி:
உடுமலை ஒன்றியம், ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் விஜயா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாவித்திரி  வரவேற்றார்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவது என்பன குறித்து ஆசிரியர் கண்ணபிரான் பேசினார்.  டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்புக்  குடிநீர் அருந்த வேண்டும் என்பது குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com