வெள்ளக்கோவிலில் குறுமைய அளவிலான அறிவியல் கண்காட்சி

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறுமைய அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறுமைய அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் குறுமைய அளவிலான அறிவியல் கண்காட்சியில் 12 தொடக்கப் பள்ளிகள், 6 நடுநிலைப் பள்ளிகள் பங்கேற்றன. 35 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் மா.முருகேசன், பா.கார்த்திகேயன், வி.பி.சாந்தி நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர்.
வெள்ளக்கோவில் கிழக்குப் பள்ளி சார்பில் வைக்கப்பட்டிருந்த நீரியக்கு விசை எடை தூக்கிக் கருவிக்கு தொடக்கப் பள்ளி நிலையில் முதல் பரிசும், சொரியங்கிணத்துப்பாளையம் பள்ளி சார்பில் வைக்கப்பட்டிருந்த கணித மாதிரிக்கு இரண்டாம் பரிசும், வேலப்பநாயக்கன்வலசு பள்ளி சார்பில் வைக்கப்பட்டிருந்த உடல் ஆரோக்கிய மாதிரிக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது.
நடுநிலைப் பள்ளி அளவில் புனித அமல அன்னை மகளிர் பள்ளி, வெள்ளக்கோவில் கிழக்குப் பள்ளி, சொரியங்கிணத்துப்பாளையம் பள்ளிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. மேலும், மயில்ரங்கம் பள்ளிக்கும்,  வெள்ளக்கோவில் கிழக்குப் பள்ளிக்கும் சிறப்புப் பரிசுகள் கிடைத்தன.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ந.குணசேகரன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சாந்தகுமார், முதுகலை ஆசிரியர் கோ.வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com