குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள கெங்கநாயக்கன்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பல்லடம் அருகேயுள்ள கெங்கநாயக்கன்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஒன்றியம்,  காட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட கெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆழ்துளைக் குழாய் கிணற்று நீரும் விநியோகிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இக்கிராமத்தில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,  முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் காட்டம்பட்டி - கொடுவாய் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து  அங்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் சுப்பிரமணியம்,  பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீனாட்சி, வருவாய் ஆய்வாளர் சபரி,  காமநாயக்கன்பாளையம் போலீஸார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில்,  பில்லூர் குடிநீர்,  ஆழ்துளைக் கிணற்று நீரை விநியோகம் செய்திட துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com