நூலக வார விழா துவக்கம்

உடுமலை முதல் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 50-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை துவங்கியது.

உடுமலை முதல் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 50-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை துவங்கியது.
ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நூலக வார வி ழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நூலக வார துவக்க விழா ஸ்டேட் பேங்க் காலனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு, நூலக வாசகர் வட்டப் பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா வரவேற்றார். வியாபாரிகள் சங்க நிர்வாகி கே.ஆர்.செல்வராஜ் துவக்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின்பாரதி பேசினார். நூலகர் ந.அபிராமி நன்றி கூறினார்.
இதைத் தொடர்ந்து "வீட்டுக்கு ஒருவர் நூலக உறுப்பினர்' என்ற தலைப்பில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும்,  உடுமலை வாசிக்கிறது என்ற தலைப்பில் கருத்தரங்கமும்,  கொசு பொருளாதாரம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளன.  மேலும் நவம்பர் 19 முதல் 21-ஆம் தேதி வரை பொன் விழா புத்தகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com