நெகிழி இல்லா திருப்பூர்: ஒரு லட்சம் துணிப் பைகள் விநியோகம்

நெகிழி இல்லா திருப்பூர் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

நெகிழி இல்லா திருப்பூர் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் (திருப்பூர் பிரிவு) சார்பில் நெகிழி இல்லா திருப்பூர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் துணிப் பை பயன்பாட்டை ஏற்படுத்தும் வகையில்,  ஒரு லட்சம் துணிப் பைகள் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வில்,  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு,  மாணவிகளுக்கு துணிப் பைகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி,  திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார்,  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்,  இந்தியத் தொழில் கூடடமைப்பின் திருப்பூர் தலைவர் கே.கந்தசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க
ஃபவுண்டேஷன் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.  இதில் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிப் பைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில்,  "மாநகரில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் முதற்கட்டமாக இந்த துணிப் பைகளை வழங்கவுள்ளோம். தொடர்ந்து பொது இடங்களில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.  திருப்பூரில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும்,  சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்  என்ற எண்ணத்திலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் துணிப் பைகள் வழங்கவுள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com