குடிமங்கலம் அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு தினம்

உடுமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
குடிமங்கலம்:
உடுமலை வட்டம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து சுகாதாரத் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உடுமலை:
உடுமலை பாரதியார் நினைவு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பல்வேறு செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
மேலும், அனைவருக்கும் நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாணவ, மாணவிகளிடையே பேசினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
பள்ளபாளையம்:
உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் டெங்கு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, விழிப்புணர்வுப் பேரணி பள்ளபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் ஜீ.ஜீவராஜ் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com