பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுப்பது எப்படி? விழிப்புணர்வூட்டும் காவல் துறை

தீபாவளி பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுக்க பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை சமயத்தில் திருட்டைத் தடுக்க பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீஸார் விடுத்துள்ள அறிவிப்பு:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வீடுகளில் அதிக அளவில் பணம், தங்க நகைகள் இருக்கலாமெனக் கருதி,  திருடலாம் என்கிற எண்ணத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே, பகல், இரவு எந்நேரமும் சிறிது நேரமே வீட்டைவிட்டுச் சென்றாலும்கூட அண்டை வீட்டினரிடம் கண்காணிக்கச் சொல்லவும்.  
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியபடி தெருவிலோ, பூட்டிய வீட்டின் அருகிலோ அந்நிய நபர்கள் நின்றிருந்தால், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.
பண்டிகைச் செலவுக்கென வங்கிகளில் பணம் எடுக்கும்போது, உடன் ஒருவரை அழைத்துச் செல்லவும்.
உங்கள் உடலில் அரிப்புப் பொடிகளைத் தூவியும், ஆடைகளை அசிங்கப்படுத்தியும், ரூபாய் நோட்டுகளைக் கீழே போட்டு கவனத்தைத் திசை திருப்பியும் உங்கள் பொருளை மர்ம நபர்கள் திருடிச் செல்லலாம்.
வீடுகளுக்கு வந்து டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பூசி போடுவதாகக் கூறி மயக்க ஊசி போட்டும் கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com