கேம்பிரிட்ஜ் பள்ளி சார்பில் சேவூரில் டெங்கு விழிப்புணர்வு

அவிநாசி அருகே, சேவூரில் கேம்பிரிட்ஜ் பள்ளி சார்பில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி அருகே, சேவூரில் கேம்பிரிட்ஜ் பள்ளி சார்பில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேவூர், பந்தம்பாளையம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சேவூர் காவல் உதவி ஆய்வாளர் குமார் தொடக்கிவைத்தார்.
பந்தம்பாளையம் பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணி, சேவூர் கைகாட்டி, கோபி சாலை, வடக்கு வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மாரியம்மன் கோயில் வீதி வழியாக பந்தம்பாளையம் பள்ளியில் நிறைவடைந்தது. மேலும், சேவூர் நகரப் பகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகள், பனியன், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அனைத்து மக்களுக்கும், குழுவாகச் சென்ற கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.
இதில், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்புக்  குடிநீர் வழங்கபபட்டது.  மேலும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை மூடி வைக்கவேண்டும். சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மூன்று நாள்களுக்கு மேல் குடிநீரைச் சேமித்து வைக்கக் கூடாது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். அனைவரும் நிலவேம்புக் குடிநீர்  குடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பதாகைகளை ஏந்தியும் பேரணியில் பங்கேற்றனர்.
இதில், பள்ளித் துணை முதல்வர் விவேகானந்தன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யசோதா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com