டெங்கு விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார்

காங்கயம் அருகே கோவில்பாளையத்தில் நடைபெற்றது மருத்துவ முகாமின்போது மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

காங்கயம் அருகே கோவில்பாளையத்தில் நடைபெற்றது மருத்துவ முகாமின்போது மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
  காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில் உள்ளது கோவில்பாளையம், புதுக் காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமதி (25) என்பவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாள்களுக்கு முன்னர் சங்கரன் மகள் சங்கமித்ரா (6) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 இந்நிலையில், கோவில்பாளையம், காடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.
 கோவில்பாளையத்தில் நடைபெற்ற முகாமில், டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் அப்பகுதி மக்கள், காங்கயம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
  மேலும், இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில்,  "அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால், வட்டிக்குப் பணம் வாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். அரசு மருத்துவமனையில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. சரிவரப் பரிசோதனையும் செய்வதில்லை' என்றனர்.
  இதையடுத்து, புகார் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com