அவிநாசி குளம் காக்கும் இயக்கத்துக்கு விருது

அவிநாசியைச் சேர்ந்த குளம் காக்கும் இயக்கத்தின் சிறந்த பணிக்காக, புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி விருது வழங்கி கௌரவித்தார்.

அவிநாசியைச் சேர்ந்த குளம் காக்கும் இயக்கத்தின் சிறந்த பணிக்காக, புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி விருது வழங்கி கௌரவித்தார்.
அவிநாசியில் உள்ள குளம், குட்டைகளைக் காக்கும் நோக்கில் தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து குளம் காக்கும் இயக்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து அவிநாசியின் பிரதானமாக உள்ள தாமரைக்குளம், சங்கமாங்குளம் ஆகிய குளங்களைத் தூர்வாரும் பணியிலும், குளங்களில் உள்ள சீமைக் கருவலே மரங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
இப்பணியின்போது, இரு குளத்துக்கும் தண்ணீர் செல்லும் நீர்வழித் தடங்களில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தாமரைக்குளம் நிரம்பியது. சங்கமாங்குளமும் 40 சதவீத அளவுக்குத் தண்ணீர் நிறைந்தது.
இப்பணி பொதுமக்கள், விவசாயிகள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில், இப்பணிக்காக தனியார் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளம் காக்கும் இயக்கத்துக்கு சிறந்த தன்னார்வப் பணிக்கான விருதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
இதுகுறித்து குளம் காக்கும் இயக்கத்தினர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்துள்ள இந்த விருது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
குளம் காக்கும் இயக்கம் சார்பில் நீர்நிலைகளை மீட்பதோடு, வாரந்தோறும் பொதுமக்களுக்கு இலவமாக வேம்பு உள்ளிட்ட மரங்களின் விதைகளையும் வழங்கி வருகிறோம். நீர்நிலைகளில் குப்பைகள் உள்ளிட்டவற்றைத் தடுக்க விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com