மாவட்டத்தில் 3 லட்சம் பேருக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 902 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 3 லட்சம் சந்தாதாரர்களுக்கு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 902 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 3 லட்சம் சந்தாதாரர்களுக்கு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னராமசாமி, கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கிப் பேசியதாவது:
தனியார் கேபிள் நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணங்கள் வசூலித்து வந்த நிலையில் தமிழக அரசே தற்போது குறைந்த விலையில் கேபிள் டிவி சேவையைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது டிஜிட்டல் ஒலிபரப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டுப்பாட்டு அறை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் கேபிள் சேவையை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழ ங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தெளிவான கேபிள் டிவி சேவையைப் பொதுமக்கள் பெற முடியும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் மொத்த
முள்ள 902 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 3 லட்சத்து 5 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளது.
செட்டாப் பாக்ஸþக்கு பிணைத் தொகையாக ரூ. 180 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சந்தா தொகையாக ரூ. 125 வசூலிக்கப்ப டும் என்றார்.
முன்னதாக, உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி, ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை ஆகியவற்றை யை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்கு மார், அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் பி.ஜெய்சிங், உடுமலை
வட்டாட்சியர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com