தனிநபர் கழிப்பிடம் கட்டினால்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி: விவசாயத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

தனிநபர் கழிப்பிடம் கட்டினால்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தனிநபர் கழிப்பிடம் கட்டினால்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய மாநாடு அவிநாசி பி. ராமமூர்த்தி நினைவகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய துணைத் தலைவர் ஏ.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் முன்னிலை வகித்தார்.
இதில், 100 நாள் வேலையை 200 நாள்களாக அதிகரித்து, தினசரி ரூ. 400 சம்பளம் வழங்கவேண்டும். காலம் தாழ்த்தாமல் வேலைசெய்யும் இடத்திலேயே வாரந்தோறும் சம்பளம் வழங்கவேண்டும். வடுகபாளையம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத நூறு நாள் வேலையை உடனடியாக வழங்கவேண்டும். தனிதபர் கழிப்பிடம் கட்டினால் தான் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கப்படும் என கட்டாயப்படுத்தக் கூடாது.  ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்படும் நியாயவிலைக் கடைகளை மூடக் கூடாது. நூறு நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியத் தலைவர்  எஸ்.மல்லப்பன், துணைத் தலைவர் கே.குருநாதன், ஒன்றியச் செயலாளர் ஏ.சண்முகம், துணைச் செயலாளர்  வி.பி.முருகேசன், பொருளாளர்  கே.குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com