காங்கயம் அரசு மருத்துவமனைக்கு வண்ணம் பூசிய தன்னார்வலர்கள்

காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் வண்ணம் பூசும் பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் வண்ணம் பூசும் பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம் அரசு மருத்துவமனை 2 ஏக்கர் பரப்பளவில்,  36 மருத்துவ பிரிவுகளோடு செயல்பட்டு வருகிறது. 
இதில் உள்ள கட்டடங்கள் பல ஆண்டுகளாக வண்ணம் பூசாமல் இருந்தது. இந்நிலையில்,  மருத்துவமனையின் சுற்றுப்புறத் தூய்மை,  சுவர்களில் வண்ணம் பூசுதல்,  கதவு, ஜன்னல், கழிப்பறைகள்,  அவசர சிகிச்சைப் பிரிவு,  மகளிர் வார்டு, பொதுப் பிரிவு என மருத்துவமனையில் உள்ள கட்டடங்களுக்கு ரூ. 2 லட்சம் செலவில் காங்கயம் வேர்கள் அமைப்பின் சார்பில் கடந்த 4  நாள்களாக வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை காங்கயம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் பூங்கொடி,  காங்கயம் வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர் வி.சங்கரகோபால் உள்ளிட்டோர் முன்னின்று செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com