1,683 மூட்டைகள்  சூரியகாந்தி  விதை ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை 1,683 மூட்டைகள் சூரியகாந்தி விதை ஏல விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை 1,683 மூட்டைகள் சூரியகாந்தி விதை ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது. இந்த வார ஏலத்துக்கு கரூர், அறவக்குறிச்சி, சம்மனப்பட்டி, சொக்கநாதபுரம், கல்லுப்பட்டி, பாறையூர், கூம்பூர், பழனிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த 70 விவசாயிகள் 1,683 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதன் மொத்த எடை 82,510 கிலோ.
ஈரோடு,  சிவகிரி,  கோபி,  பூனாச்சி,  காங்கயத்தைச் சேர்ந்த 11 வணிகர்கள் வந்திருந்தனர். அதிகபட்சம் கிலோ ரூ.35.16-க்கும், குறைந்தபட்சமாக கிலோ  ரூ.30.89-க்கும் விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.33.69. மொத்த விற்பனைத் தொகை ரூ.27.25 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com