அவிநாசியில் பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்போனது.

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்போனது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 1,220 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ.5,650 வரை, எல்.ஆர்.ஏ. டிசிஎச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 4,500 முதல் ரூ. 5,000 வரை, கொட்டு ரகப் (மட்ட ரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 1,500 முதல் ரூ. 2,200 வரை என ஏலம்போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்துக்குப் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com