ரூ.1.99 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.99 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.


முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.99 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடந்த ஏலத்தில் முத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மேட்டாங்காட்டுவலசு, குழலிபாளையம், சக்கரைவலசு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், வெள்ளக்கோவில், முத்தூர், காங்கயத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்றனர்.
இங்கு 11,123 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 4,321 கிலோ. இதில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.29.05 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.28.55. மொத்தம் ரூ.1.18 லட்சத்துக்கு விற்பனையானது. கொப்பரை 1,044 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ.40.10 முதல் ரூ.102.50 வரை விலை போனது. மொத்தம் ரூ.81 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 158க்கான விற்பனைத் தொகை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com