மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை: பல்லடத்தில் பிப்ரவரி 15- இல் சிறப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்,  பல்லடத்தில் சிறப்பு முகாம் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்,  பல்லடத்தில் சிறப்பு முகாம் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:
மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்,  மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 40 சதவீதத்துக்கு மேலும்,  கண்பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் 100 சதவீதம் உள்ளவர்கள்,  மாற்றுத்திறனாளி அடையாளஅட்டை பெற்று,  இதுநாள் வரை மாதாந்திர உதவித் தொகை பெறாதவர்கள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனடிப்படையில் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு  பல்லடம், திருச்சி சாலை, வைஸ் திருமண அரங்கில் பிப்ரவரி 15-ஆம் தேதி  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,  குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,  வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் புகைப்படம், ஆகியவற்றுடன் நேரில் வந்து உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com