நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள்  பாதுகாப்புச் சபைக் கூட்டம்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சபையின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சபையின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சபையின் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குழந்தைசாமி, ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
திருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்க விடுகின்றன. ஆற்று நீரின் உப்புத் தன்மை 3,000 டி.டி.எஸ் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.  இந்த மாசுபட்ட ஆற்று நீரால் திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பகுதியில் விவசாயமும்,  கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற நீராதாரங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சீர்கெட்டு விட்டன. 
எனவே நொய்யல் ஆறு மாசுபடுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும் என்று  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com