மகாராணி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

தாராபுரம் மகாராணி கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் மகாராணி கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு,  கல்லூரித் தலைவர் ஜி.எம்.அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். செயலர் என்.ஏ.எச்.சுலைமான், இயக்குநர் எம்.ஆர்.தமிழரசன், அறக்கட்டளை உறுப்பினர் என்.ஏ.எச்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில்,  ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் கல்லூரி பேராசிரியர் கே.பிரபாகரன் பங்கேற்று கருத்தரங்கம் குறித்த மலரை வெளியிட்டார். மேலும், நவீன வணிகத் துறையில் நடைமுறை வணிகத்தில் ஏற்படும் தாக்கங்களும், சவால்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் கே.பிரபாகரன், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.வள்ளி தேவசேனா ஆகியோர் உரையாற்றினர்.
திருப்பூர் குமரன் கல்லூரிப் பேராசிரியர் ஆர்.மோகனசுந்தரி, கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் ஏ.மீனாட்சி ஆகியோரும் நவீன வணிகம் குறித்து உரையாற்றினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களது ஆய்வறிக்கைகளை கருத்தரங்கில் சமர்ப்பித்தனர். சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் வணிகவியல் மற்றும் கணினி அறிவியல்துறை தலைவர் ஏ.வாஹீதா பானு, வணிகவியல் துறை தலைவர் என்.சசிக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com